top of page

சித்த மருத்துவ வரலாறு



சித்த மருத்துவம் தமிழ் முதல் சங்க காலமாகிய கி.மு. 16000 ஆண்டுகளுக்கு முன் தொட்டு விளங்கி வருகிறது என்று ஒருசாரார் கூறுகின்றனர். உலகில் மக்கள் தோன்றி நோய் தோன்றிய காலம் முதலே சித்த வைத்தியம் தோன்றியது என சித்த மருத்துவ ஆதிநு}ல் கூறுகிறது. சித்த வைத்தியத்தின் பெயர் தொடக்க காலத்தில் சிந்தாமணி வைத்தியம் - ஆயுள் வேதம் என பெயர்பெற்றிருக்கலாம் அதாவது ஆயுளை நீட்டிக்க கூடிய வேதம் என்று பொருள்படும். இந்த சித்த மருத்துவம் சித்தர்கள் மூலமாக மக்களுக்குகிடைக்கப்பெற்றதால் சித்த மருத்துவம் என பெயர்பெற்றிருக்கலாம். சித்த மருத்துவ நூல்கள் அனைத்தும் தமிழில் காணப்படுகின்றன. அவ்வாறு காணப்படும் நூல்களில் நோய்களின் குறிகுணம் நோய்கள் வரும் வழி அந்த நோய்களுக்கு உண்டான மருத்துவம், மருந்துகள் என விரிவாக கூறப்பட்டுள்ளது.


சித்தமருத்துவத்தில் குழந்தைகள் மருத்துவம், பொதுமருத்துவம், மகளிர் மருத்துவம், கண்மருத்துவம், விஷமருத்துவம், வர்மமருத்துவம், என பல்வேறு பிரிவுகள் அடங்கியுள்ளன. குழந்தைகள் மருத்துவத்தில் குழந்தை பிறந்த நாள் முதல் சுமார் 12 வயதுவரை குழந்தைகளுக்குவரும் நோய்களை பற்றி குறிப்பிடுகின்றது. அவ்வாறு குறிப்பிடுகையில் 108 நோய் தொகுதி உள்ளதாக சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன. அதுபோல பொதுமருத்துவத்தில் மனிதர்களுக்குவரும் வியாதிகள் குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளன. சில நூல்களில் மனிதர்களுக்கு 4448 வியாதிகள் வருவதாகவும் வேறு சில நூல்களில் மனிதர்களுக்கு 4000 நோயும், கால்நடைகளுக்கு 400 நோயும், பட்சி பறவைகளுக்கு 48 நோயும் என குறிப்பிடுகின்றனர். பெண்களுக்கு வரும் நோய்களைபற்றி தனியாகவும் பெண்கள் கெற்பிணியாக இருக்கும் போது அவர்களுக்கு வரும் நோய்களை குறித்து தௌpவாகவும். விரிவாகவும் கூறப்பட்டுள்ளது. இது போல பாம்பு போன்ற பெறிய விஷங்கள் தீண்டுவது குறித்தும் பூனை, எலி, நாய், நரி , தேள், பூரான், இவைகள் மூலமாக மனிதாகளுக்கு வரும் விஷ நோய்கள் குறித்தும் கூறப்பட்டுள்ளது. கண்களில் வரும் வியாதிகள் குறித்தும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.


சித்த மருத்துவத்தின் சிறப்பு மருத்துவ பகுதியான வர்மமருத்துவம் குறித்தும் மிக தெளிவாக கூறப்பட்டள்ளது. ஒரு மனிதனுக்கு வர்மகாயம் ஏற்படும் முறை அந்த வர்மகாயங்களினால் வர்மம் உடலில் ஏற்படும் வேறுபாடுகள். அதன் காரணமாக அவனுக்கு வரும் நோய்கள் இந்நோய்களைகுணப்படுத்த, உள்மருந்து மற்றும் வெளிமருந்தாக. தடவுமுறைகள் எண்ணெய் போட்டு தடவுமுறைகள், மருந்து பொருட்களை கிழியாக கட்டி ஒற்றடம் போடுதல், தாரை போடுதல், போன்ற முறைகள் குறித்தும் வர்ம மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.


இது தவிர மருந்து செய்முறைகள் குறித்து ஏராளமான நூல்கள் ஏராளமான சித்தர்களால் எழுதப்பட்டுள்ளது.



சித்த மருத்துவ சிகிட்சைமுறை தேவுறை, மக்களுறை, சூருறை , ஒப்புறை, எதிர்ருறை கலப்புறை, முதலிய வரிசை முறைகளைக் கொண்டது.


  • தேவுறை என்றhல் மணி, மந்திரம், பற்பசெந்தூங்கள், முப்பு, செயநீர், களங்கு, கல்பம், யோகம், ஞானம், முதலியவற்றhல் நோய்களைமாற்றி நீண்ட நாட்கள் வாழும்முறை ஆகும்.

  • மக்களுறைஎன்றால் மாத்திரை, குளிகை, கட்டு, தைலம், எண்ணெய், நெய், இளகம், இராசயனம், குழம்பு, பொடி, குடிநீர் இவைகளால் மக்களுக்கு ஏற்படும் நோய்களை குணப்படுத்தும் முறை.

  • சூருறை என்பது அறுவைசிகிட்சை புண்ணாக்குதல் கொம்புவைப்பு, குழல்வைப்பு, குடோரி, மூக்குறை (நசியம்) பீச்சு, சூடு, கொப்பளம், புகை, அட்டைவிடுதல், வர்ம சம்மந்தமான ஒடிவு முறிவு அடி, இடி, காயம், தட்டு, முட்டுகள் சம்மதமாக ஒற்றடம் தாக்கல், அமர்த்தல், தட்டல், முதலிய சிகிட்சை முறைகளாகும்.

  • ஓப்புறை என்பது வெப்பமான நோய்களுக்கு வெப்பமான மருந்துகளும் தட்பமானநோய்களுக்கு தட்பமான மருந்துகளும் கொடுத்து நோய்களை குணப்படுத்துதல்

  • எதிருறை என்பது வெப்பமான நோய்களுக்கு தட்பமான மருந்துகளும் தட்பமானநோய்களுக்கு வெப்பமான மருந்துகளும் கொடுத்து நோய்களை குணப்படுத்துதல்

  • கலப்புறை என்பது நோய்களின் செய்கைக்கு தக்கவாறு தட்ப வெப்ப மருத்துபொருட்களைகலந்து கெடுத்து நோய்களை குணப்படுத்தும் முறை ஆகும்.

இன்று ஆங்கில மருத்துவத்தின் மீது உள்ள மோகத்தால் மக்கள் இந்திய மருத்துவத்தை விட்டுஅங்கு சென்றுகொண்டிருக்கிறார்கள். இந்த ஆங்கில மருத்துவம் இந்தியாவில் காலடி வைப்பதற்கு முன்னரே நமது இந்திய மருத்துவத்தின் ஒரு பிரிவான சித்த மருத்துவம். மிக சிறந்த முறையில் தமிழகத்தில் மட்டுமின்றி பாரத கண்டம் முழுவதும் பரந்து விரிந்து இருந்தது. இப்போது மீண்டும் புத்துயிர் பெற்று வந்துக் கெண்டிருக்கிறது.


சித்தமருத்துவம் தமிழ் மருத்துவமாகவும் ஆயுர் வேதமருத்துவம் ஆரியர்கள் வைத்தியமாகவும் யூனானிமருத்துவம் முகமதியர் மருத்துவமாகவும், ஹோமியோபதி மருத்துவம் ஜெர்மானியர்கள் மருத்துவமாகவும் ஆங்கிலமருத்துவம், ஆங்கிலேயர்களின் மருத்துவமாகவும் இன்று விளங்கி வருகிறது.


மோகனராஜ் - மூஞ்சிறை

10 views0 comments

Bình luận

Đã xếp hạng 0/5 sao.
Chưa có xếp hạng

Thêm điểm xếp hạng
bottom of page